திமுக அமைச்சர் பெயரை கூறி, திருச்சி கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை! நாடக காதலன் நடத்திய கொடூரம்! - Seithipunal
Seithipunal


காதலிப்பதாக கூறி கல்லூரி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக, கல்லூரி மாணவி ஒருவர் திருச்சி எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

திமுக அமைச்சர் ஒருவரின் பெயரைக் கூறி, கல்லூரி மாணவி இடம் அத்துமீறலில் ஈடுபட்டது தற்போது தெரியவந்துள்ளது. 

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட அந்த 18 வயது கல்லூரி மாணவிக்கு, சிறுமருதூர் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த நட்பு பின்னாளில் காதலாக மாறி உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் கல்லூரி மாணவியை சிலம்பரசன் தனது நண்பன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு சிலம்பரசன் தனது நண்பர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து. கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்/ இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி, தனது தாயாருடன் திருச்சி எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

மேலும், கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததை வீடியோவாக எடுத்து மிரட்டி, பலமுறை கல்லூரி மாணவியை சிலம்பரசன் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் திமுக அமைச்சர் ஒருவரிடம் ஓட்டுனராக சிலம்பரசன் பணிபுரிந்து வருவதாக கூறி, மாணவியை ஏமாற்றி காதலித்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கல்லூரி மாணவி தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அந்த திமுக அமைச்சர் அலுவலகம் ஒரு விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளதாக தெரிகிறது. அதில், சிலம்பரசன் என்ற நபர் தன்னிடம் ஓட்டுனராக பணியாற்ற வில்லை என்றும், அமைச்சர் பெயரை தவறாக பயன்படுத்தி உள்ளதாகவும் அமைச்சர் அலுவலகத்தில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy College Girl Abused


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->