சிகிச்சை, பரிசோதனைகள் நிறைவு: மு.க.ஸ்டாலின் எப்போது வீடு திரும்புவார்!
Treatment tests completed When will M KStalin return home
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனைத்து பரிசோதனைகளும், சிகிச்சைகளும் நிறைவடைந்த நிலையில் அவர் உடல்நலத்துடன் இருப்பதாகவும், நாளை வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதிவாரியாக திமுக நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து வந்தார்,இந்தநிலையில் 21 தேதி வழக்கம் போல் நடைபயிற்சி சென்ற மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதைத்தொடர்ந்து அவர், ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவருக்கு உடல் பரிசோதனையை மேற்கொண்டதை தொடர்ந்து அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து ‘முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் 3 நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் அவருக்கு வேறு சில பரிசோதனைகள் மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டதால் ஆஸ்பத்திரியில் இருக்கும் நிலையிலும், மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இதற்கிடையில், முதல்-அமைச்சருக்கு இதயத்துடிப்பில் சில வேறுபாடுகள் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர், ஆஞ்சியோகிராம் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதாக அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.அதுமட்டுமல்லாமல் முதல்-அமைச்சர் நலமுடன் இருப்பதாகவும், அவர் தனது வழக்கமான பணிகளை 2 நாட்களில் மேற்கொள்வார் என்றும் ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது.
அனைத்து பரிசோதனைகளும், சிகிச்சைகளும் நிறைவடைந்த நிலையில் அவர் உடல்நலத்துடன் இருப்பதாகவும், பூரண குணமடைந்துவிட்டார் என்றும் இதனால் நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவார் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. .
English Summary
Treatment tests completed When will M KStalin return home