மாதம் ரூ.1,30,400 சம்பளம்! தமிழக அரசின் உணவு பாதுகாப்புத் துறையில் பணி - மிஸ் பண்ணிடாதீங்க! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத் துறையில் உள்ள 2 ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் (Grade-II) பணியிடங்களை நிரப்பும் நோக்கில், தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அறிவிப்பு எண்: 10/MRB/2025
பணி: ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் (Grade-II)
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.35,400 – ரூ.1,30,400

தகுதி:
Chemistry அல்லது Bio-chemistry பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக, DMLT (அயர்வக தொழில்நுட்பம்) படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு (1.7.2025க்கேற்ப):

பொதுப் பிரிவு: 18 முதல் 32 வயது

மாற்றுத்திறனாளிகள் (பொது): 42 வயது வரை

முன்னாள் ராணுவத்தினர்: 48 வயது வரை

பிற இனக்குழுக்களுக்கு வயது வரம்பு இல்லை

தேர்வு முறை:
பதினாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் DMLT படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வு தேவைப்பட்டால், அதற்கான தகவல் மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி: ரூ.600

எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள்: ரூ.300
(கட்டணம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்)

விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்:
www.mrb.tn.gov.in

கடைசி தேதி: 29.7.2025

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu Food Safety Dept Laboratory Technician job july 2025


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->