ஆசிய கோப்பை T20 கிரிக்கெட் போட்டிகள்: செப்டம்பர் 09 இல் தொடக்கம்: இந்தியா - பாகிஸ்தான் இடையே மூன்று போட்டிகள்: முழு அட்டவணை உள்ளே..! - Seithipunal
Seithipunal


ஆசிய கோப்பை டி.20 கிரிக்கெட் போட்டிகள் வரும் செப்டெம்பர் 09 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இதற்கான முழு அட்டவணையும் வெளியிட்டுள்ளது. குறித்த போட்டிகள் அனைத்தும்  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையின் படி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14 அன்று மோதவுள்ளன. இதனை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வி உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகியவற்றுடன் ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய 08 அணிகள்  பங்கேற்கின்றன.

சமீபத்தில் காஸ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அரசியல் பதற்றம் நிலவியது. இதன் காரணமாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பொதுக் கூட்டத்தில் இருந்து விலகுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) கூறியிருந்தது.

இந்நிலையில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி தலைமையில் புதன்கிழமை தாக்காவில் இந்தக் கூட்டம் நடைபெற இருந்தது. இருப்பினும், BCCI மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர்கள் காணொளிக் காட்சி மூலம் கூட்டத்தில் பங்கேற்றனர். இதன்போது செப்டம்பர் மாத நிகழ்வுக்கான அட்டவணை இறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் அடுத்த டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ளது. 2023 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன்னதாக நடந்த முந்தைய ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா கோப்பையை கைப்பற்றியது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கடைசியாக இதே மைதானத்தில் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் போட்டியில் மோதின. அதில், விராட் கோலியின் அதிரடி சத்தத்துடன், இந்தியா பாகிஸ்தானை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப்பெற்றது.

ஆசியக் கோப்பை 2025 முழு அட்டவணை பின்வருமாறு:-

செப்டம்பர் 09 (செவ்வாய்): ஆப்கானிஸ்தான் vs ஹாங்காங்

செப்டம்பர் 10 (புதன்கிழமை): இந்தியா vs யுஏஇ

செப்டம்பர் 11 (வியாழக்கிழமை): வங்கதேசம் vs ஹாங்காங்

செப்டம்பர் 12 (வெள்ளிக்கிழமை): பாகிஸ்தான் vs ஓமன்

செப்டம்பர் 13 (சனிக்கிழமை): வங்கதேசம் vs இலங்கை

செப்டம்பர் 14 (ஞாயிறு): இந்தியா vs பாகிஸ்தான்

செப்டம்பர் 15 (திங்கள்): இலங்கை vs ஹாங்காங்

செப்டம்பர் 16 (செவ்வாய்): வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான்

செப்டம்பர் 17 (புதன்கிழமை): பாகிஸ்தான் vs யுஏஇ

செப்டம்பர் 18 (வியாழக்கிழமை): இலங்கை vs ஆப்கானிஸ்தான்

செப்டம்பர் 19 (வெள்ளிக்கிழமை): இந்தியா vs ஓமன்

சூப்பர் 4 சுற்று

செப்டம்பர் 20 (சனிக்கிழமை): குரூப் பி தகுதிச் சுற்று 1 vs குரூப் பி தகுதிச் சுற்று 2

செப்டம்பர் 21 (ஞாயிற்றுக்கிழமை): குரூப் ஏ குவாலிஃபையர் 1 vs குரூப் ஏ குவாலிஃபையர் 2

செப்டம்பர் 22 (திங்கள்): ஓய்வு நாள்

செப்டம்பர் 23 (செவ்வாய்): குரூப் ஏ குவாலிஃபையர் 1 vs குரூப் பி குவாலிஃபையர் 2

செப்டம்பர் 24 (புதன்கிழமை): குரூப் பி குவாலிஃபையர் 1 vs குரூப் ஏ குவாலிஃபையர் 2

செப்டம்பர் 25 (வியாழக்கிழமை): குரூப் ஏ குவாலிஃபையர் 2 vs குரூப் பி குவாலிஃபையர் 2

செப்டம்பர் 26 (வெள்ளிக்கிழமை): குரூப் ஏ குவாலிஃபையர் 1 vs குரூப் பி குவாலிஃபையர் 1

செப்டம்பர் 27 (சனிக்கிழமை): ஓய்வு நாள்

இறுதிப் போட்டி

செப்டம்பர் 28 (ஞாயிற்றுக்கிழமை): இறுதிப் போட்டி


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Asia Cup T20 cricket matches start on September 09


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->