திருச்சியில் பிரதமர் மோடி இன்று 08 கிமீ தூரம் 'ரோடு ஷோ': அதி உச்ச பாதுகாப்பு நடவடிக்கை: 300 கடைகள் மற்றும் ஓட்டல் அடைப்பு..!
Prime Minister Modi to hold 8 km road show in Trichy today
02 நாள் அரசு முறை பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு செல்கிறார். அப்போது அவர் தங்கியிடுக்கும் திருச்சி ஓட்டலில் இருந்து வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா, நீதிமன்றம், தலைமை தபால் நிலையம் வழியாக விமான நிலையம் வரை சுமார் 08 கிமீ தூரம் பிரதமர் 'ரோடு ஷோ' செல்ல உள்ளார்.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு திருச்சி, அரியலூரில் 2000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிறப்பு பாதுகாப்புக்குழு (எஸ்.பி.ஜி.) டி.ஐ.ஜி. விமுக்த் நிரஞ்சன் தலைமையிலான அதிகாரிகள் விமான நிலையம், பிரதமர் தங்கும் தனியார் ஓட்டலை பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வந்துள்ளனர்.
-8c5mj.png)
மேலும் பிரதமர் வந்து செல்லும் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எஸ்.பி.ஜி. அதிகாரிகள் விமானம் மூலம் விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதியில் வானில் வட்டமடித்தபடி ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.
பிரதமர் தங்கும் தனியார் ஓட்டலிலும், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் எஸ்.பி.ஜி. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த ஓட்டலுக்கு 06 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் மத்திய மாநில அரசுகளின் உளவுத்துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள நான்கு ரோட்டில் இருந்து, வெஸ ட்ரி பள்ளி ரவுண்டானா வரை பேரிகார்டு தடுப்பு அமைத்து வாகன ஓட்டிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் வந்து செல்லும் திருச்சி-புதுக்கோட்டை சாலை, பாரதிதாசன் சாலை, ஆட்சியர் அலுவலக சாலை, குட்ஷெட் மேம்பாலம் ஆகிய இடங்களில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாம் வெளியில் தெரியாதபடி சாமியானா பந்தல் மூலம் மறைக்கப்பட்டுள்ளது.
-buty2.png)
அத்துடன், பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமர் வந்து செல்லும் வழித்தடத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் நாளை மதியம் வரை மூட போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் சுப்பிரமணியபுரம் முதல் விமான நிலையம் வரை, ஆட்சியர் அலுவலக சாலையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் வந்து பொன்னேரியில் இறங்கவுள்ளார். அங்கு இரவோடு இரவாக அமைக்கப்பட்ட ஹெலிபேட்டில் மூன்று முறை ஹெலிகாப்டரை இறக்கி ஒத்திகை நடைபெற்றது.
English Summary
Prime Minister Modi to hold 8 km road show in Trichy today