ரயில் பயணிகளே! இந்திய ரயில்வே புதிய கட்டுப்பாடு!லக்கேஜ் லிமிட் இவ்வளவுதான்.. மீறினால் அபராதம்
Train passengers Indian Railways new regulation Luggage limit is this much Penalty if exceeded
இந்திய ரயில்வே, ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கான சாமான்கள் எடை விதிகளை தற்போது கடுமையாக்கியுள்ளது. இதற்கமைய, அனுமதிக்கப்பட்ட எடையை மீறி சாமான்களை எடுத்துச் சென்றால், அதற்கேற்ப அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயிலில் பயணிக்கும்போது, பெரும்பாலானவர்கள் சுமக்கக்கூடிய அளவுக்கு மேல் சாமான்களை எடுத்துச் செல்லும் பழக்கம் கொண்டுள்ளனர். குறிப்பாக, தங்கள் சொந்த ஊருக்குப் பயணிக்கும் மக்கள், பாத்திரங்கள், உபகரணங்கள், படுக்கை உபயோக பொருட்கள் உள்ளிட்டவற்றை அதிகமாக எடுத்துச் செல்வது வழக்கமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், ரயில்வே நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
வகுப்பின்படி அனுமதிக்கப்படும் இலவச சாமான்கள் எடை வரம்புகள் வருமாறு:
-
பொதுவகுப்பு பயணிகளுக்கு 35 கிலோ
-
ஸ்லீப்பர் வகுப்புக்கு 40 கிலோ
-
3rd AC, 2nd AC பயணிகளுக்கு 50-60 கிலோ
-
1st AC பயணிகளுக்கு அதிகபட்சம் 70 கிலோ
இந்த வரம்புகளை மீறி பயணம் செய்தால், அதற்கேற்ப அபராதம் விதிக்கப்படும். குறிப்பாக, முன்பதிவு செய்யாமல் அதிக சாமான்கள் எடுத்துச் செல்லும் பயணிகள் மீது TTE (Traveling Ticket Examiner) அல்லது சாமான்கள் ஆய்வாளர் அபராதம் விதிக்க அதிகாரம் பெற்றுள்ளனர். இந்த அபராதத் தொகை ₹50 முதல் ₹500 அல்லது அதற்கு மேல் வரலாம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், பயண தூரத்தைப் பொறுத்து, கூடுதல் சாமான்களுக்கு இந்த அபராதம் கணக்கிடப்படும். இது பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம். எனவே, பயணிகள் முன்கூட்டியே ரயில்வே நிலையங்களின் பார்சல் அலுவலகத்தில் கூடுதல் சாமான்களை பதிவு செய்து அனுப்ப பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறையை பின்பற்றுவதன் மூலம், பயணிகள் அபராதங்களை தவிர்த்து சீரான மற்றும் வசதியான பயண அனுபவத்தை பெறலாம். ரயில்வே விதிகளை மீறுவது தற்போது நிதி சுமைதான் அல்லாமல் பயணத்தில் தாமதத்தையும் ஏற்படுத்தும் என்பதால், அனைவரும் இந்த அறிவுறுத்தல்களை மதித்து செயல்பட வேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
English Summary
Train passengers Indian Railways new regulation Luggage limit is this much Penalty if exceeded