மாடு மேய்க்கும் போராட்டத்தை அறிவித்த சீமான்!
Naam tamizhar party Seeman cow protest
நாம் தமிழர் கட்சி சார்பில், கால்நடைகள் மேய்ச்சலுக்கு விதிக்கப்பட்ட தடைகளுக்கு எதிராக மாடு மேய்க்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆகஸ்ட் 3ஆம் தேதி தேனி மாவட்டம் அடப்பாறையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் நேரில் பங்கேற்று, மலையேறி மாடுகளை மேய்க்க உள்ளார்.
வனத்துறை பல இடங்களில் கால்நடைகள் மேய்ச்சலுக்கு தடைகள் விதித்துள்ளதை சீமான் கண்டித்து வருகிறார்.
இதனை எதிர்த்து போராட்டம் நடத்துவது மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள மேய்ச்சல் நிலங்கள், தரிசு நிலங்கள், மந்தை மற்றும் புறம்போக்கு நிலங்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் வலியுறுத்துகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற ஆடு, மாடுகள் மாநாட்டைத் தொடர்ந்து, இந்த மாடு மேய்க்கும் போராட்டம் நடைபெறுவதால், இது தொடர்ச்சியான போராட்ட நடவடிக்கையாகவும், உழவர் உரிமைக்கான குரலாகவும் கருதப்படுகிறது.
English Summary
Naam tamizhar party Seeman cow protest