பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்ட 17 எம்.பி.,க்களுக்கு 'சன்சத் ரத்னா' விருது: மத்திய அரசு அறிவிப்பு..!
Sansad Ratna Award announced for 17 MPs who performed well in Parliament
பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 17 எம்.பி.,க்களுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான 'சன்சத் ரத்னா' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி., சுப்ரியா சுலே, ஜார்க்கண்ட் பாஜ எம்.பி., நிஷிகாந்த் துபே, உத்தவ் தாக்ரேவின் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அரவிந்த் சாவந்த் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
அத்துடன், பாராளுமன்றில் மூன்று கூட்டங்களிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்த நான்கு சிறப்பு நடுவர் விருதுகளும் வழங்கப்படுகின்றன. அதன்படி, ஒடிசா பாஜ எம்.பி., பர்த்ருஹரி மகதாப், கேரள எம்.பி., என்.கே. பிரேமச்சந்திரன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே மற்றும் சிவசேனா கட்சி எம்.பி., ஸ்ரீரங் அப்பா சந்து பார்னே ஆகியோருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் 16-வது (2014-2019) லோக் சபாவிலிருந்து தொடர்ந்து சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற விருதுகளை பெறும் எம்.பி.,க்கள்:
ஸ்மிதா உதய் வாக் (பாஜ, மஹாராஷ்டிரா)
நரேஷ் மாஸ்கே (சிவசேனா,மஹாராஷ்டிரா)
வர்ஷா கெயிக்வாட் (காங்கிரஸ், மஹாராஷ்டிரா)
மேதா குல்கர்னி (பாஜ, மஹாராஷ்டிரா)
பிரவீன் படேல் (பாஜ, உ.பி.,)
ரவி கிஷான்(பாஜ, உ.பி.,)
பி.பி.சவுத்ரி (பாஜ, ராஜஸ்தான்)
மதன் ரதோர் (பாஜ, ராஜஸ்தான்)
அண்ணாதுரை (திமுக, தமிழகம்)
பித்யுத் பரண் மகதோ (பாஜ, ஜார்க்கண்ட்)
திலீப் சைகியா (பாஜ, அசாம்)
English Summary
Sansad Ratna Award announced for 17 MPs who performed well in Parliament