உலகை பதறவைத்த விமான விபத்தின் வைரல் வீடியோ!
Viral Video Italy plane crash
இத்தாலியின் பிரெசியா நகரை அண்மித்த பகுதியில், ஒரு சிறிய அல்ட்ராலைட் விமானம் நெடுஞ்சாலையில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த பயங்கர சம்பவத்தின் சிசிடிவி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
விமானம் சாலையில் மோதி உடனடியாக தீப்பிடித்து வெடித்ததாகவும், இதில் விமானி உட்பட இரண்டு பேர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மேலும், வெடிவிபத்தில் அருகில் சென்ற இரு பைக்கர்கள் படுகாயமடைந்தனர்.
அவசர தரையிறக்கம் செய்ய முயன்றபோது விமானம் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என வானூர்தி நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.
விமானம் மிகுந்த வேகத்தில் கீழே விழுந்ததாகவும், தரையிறங்கும் முன் திசையை மாற்ற முடியாமல் நேராக சாலையில் மோதியதாகவும் தெரிய வந்துள்ளது.
விபத்துக்குள்ளானது ஃப்ரெசியா ஆர்ஜி என்ற வகையைச் சேர்ந்த அல்ட்ராலைட் விமானம் ஆகும். இது முழுக்க முழுக்க கார்பன் ஃபைபர் மூலம் தயாரிக்கப்பட்டது.
30 அடி நீள இறக்கைகள் கொண்ட இந்த விமானம் நெடுஞ்சாலையில் மோதும் தருணம் பதிவு செய்யப்பட்ட வீடியோ, விபத்தின் கொடூரத்தை தெளிவாக காட்டுகிறது.
English Summary
Viral Video Italy plane crash