நம்பிக்கை அப்படினா அவர்தான்  - முதல் இடத்தில் பிரதமர் மோடி! - Seithipunal
Seithipunal


நம்பிக்கையான உலக தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்ததையடுத்து இந்த ஆய்வு அறிக்கையை பா.ஜ.க. தலைவர்கள் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த 4-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை அமெரிக்காவை சேர்ந்த வணிக நுண்ணறிவு நிறுவனமான 'மார்னிங் கன்சல்ட்', பல்வேறு தரவுகளின் அடிப்படையில் 'உலக அளவில் நம்பிக்கை வாய்ந்த தலைவர்கள் யார்?' என்பது தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தியது. 

இந்த ஆய்வு எப்படி நடத்தப்பட்டது என்றால் ஒரு தலைவருக்கு அவரது நாட்டில் எவ்வளவு மதிப்பு இருக்கிறது? உலக அளவில் அந்த தலைவருக்கு எவ்வளவு மரியாதை உள்ளது? ஒரு தலைவர் எந்த அளவு நம்பகத்தன்மையுடன் நடந்து கொள்கிறார்? என்பன உள்ளிட்ட பல்வேறு மதிப்பீடுகள் கணக்கில் கொள்ளப்பட்டன.அந்த அடிப்படையில் அமெரிக்காவை சேர்ந்த வணிக நுண்ணறிவு நிறுவனமான 'மார்னிங் கன்சல்ட்', நடத்திய ஆய்வு அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி இந்த ஆய்வின் முடிவில், நம்பிக்கையான உலக தலைவர்களின் பட்டியலில் முதல் 8 இடங்களை பிடித்த தலைவர்களின் பெயர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, உலகின் நம்பிக்கையான தலைவர்கள் பட்டியலில்  100 மதிப்பெண்களுக்கு 75 மதிப்பெண்களை பெற்று பிரதமர் மோடி முதல் இடத்தை பிடித்துள்ளார். 

அவரை தொடர்ந்து 59 மதிப்பெண்களுடன் தென் கொரியாவின் அதிபர் லி ஜோ மியுங்க் 2-வது இடத்திலும்  அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் 57 மதிப்பெண்களுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 44 மதிப்பெண்களுடன் 8-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்தநிலையில் இந்த ஆய்வு அறிக்கையை பா.ஜ.க. தலைவர்கள் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.பா.ஜ.க. தொண்டர்கள் இதனை நாடு முழுவதும் கொண்டாடிவருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

If thats the case he is the one Prime Minister Modi in the first place


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->