சேலம் ரெயில்வே காவலாரிடம் ஒப்படைக்கப்பட்ட ரெயில் திருடன்...! நடந்தது என்ன?
Train thief handed over to Salem railway guard What happened
திருப்பூரில் காங்கேயம் உடையார் காலனியைச் சேர்ந்த 41 வயதான கனகராஜ் என்பவர்,நேற்று முன்தினம் குடும்பத்துடன் மராட்டிய மாநிலம் மந்தராலயம் கோவிலுக்கு சென்றுவிட்டு, குர்லா-கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார்.

அப்போது, தர்மபுரி-சேலம் இடையே அதிகாலை ரெயில் பாய்ந்துகொண்டிருந்த வேளையில், கனகராஜின் மனைவியிடம் இருந்த ஹேண்ட்பேக்கை திடீரென ஒருவன் பறித்துக்கொண்டு ஓட முயன்றான்.
இதனைக் கண்டு அதிரடியாக செயல்பட்ட கனகராஜ், சக பயணிகளின் உதவியுடன் அந்தக் கொள்ளையனை ரெயிலிலேயே பிடித்தார். உடனே சேலம் ஜங்ஷன் ரெயில்வே காவலரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இது குறித்த விசாரணையில் அவர் கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான தேவராஜ் என்பதும், பயணிகளின் நகை, பணம், செல்போன் ஆகியவற்றையே குறிவைத்து திருட முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, சேலம் ரெயில்வே காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தேவராஜை கைது செய்தனர். அதன்பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
English Summary
Train thief handed over to Salem railway guard What happened