பக்தர்களின் வசதிக்காக வைத்தீஸ்வரன் ரெயில் நிலையத்தில் இன்று ரெயில் நிறுத்த அனுமதி.!
train stop in vaitheshwaran temple junction south railway permission
பக்தர்களின் வசதிக்காக வைத்தீஸ்வரன் ரெயில் நிலையத்தில் இன்று ரெயில் நிறுத்த அனுமதி.!
சிவகங்கை மாவட்டத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் இரண்டாம் செவ்வாய் கிழமை சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலுக்கு நடை பயணமாக வந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்வார்கள்.
அந்தவகையில் இன்று செவ்வாய்கிழமை என்பதால் பொதுமக்கள் நேற்றிலிருந்து கோவிலுக்கு படை எடுத்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வரும் பக்தர்கள் வழிபாடுகளை முடித்துவிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு பேருந்துகளில் திரும்பச் செல்வது வழக்கம்.

தற்போது கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் சிரமம் இல்லாமல், தங்கள் ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல வசதியாக வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்குவதற்கு கோரிக்கை விடுமாறு தஞ்சை மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கத்தின் மூலமாக கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்று தென்னக ரயில்வே திருச்சி கோட்டம் சார்பில் பக்தர்கள் வசதிக்காக வைத்தீஸ்வரன் கோயில் ரயில் நிலையத்தில் வண்டி எண் 22536 பனாரஸ்-ராமேஸ்வரம் வாராந்திர அதிவிரைவு ரயில் மற்றும் 16851 சென்னை எழும்பூர்-ராமேஸ்வரம் விரைவு வண்டி உள்ளிட்ட இரண்டு ரயில் வண்டிகள் செவ்வாய்க்கிழமை மட்டும் தற்காலிகமாக நின்று செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதைக்கேட்ட பக்தர்கள் வைத்தீஸ்வரன் கோயிலில் ரயில்களுக்கு நிறுத்தம் அறிவித்த தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் மணீஷ் அகர்வால் மற்றும் தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
English Summary
train stop in vaitheshwaran temple junction south railway permission