ரயில் பயணிகளே உஷார்...! ஜூலை 1 முதல் மாறப்போகும் சட்டம்...! - பெண்கள் பெட்டியில் நுழைந்தால் எவ்வளவு அபராதம் தெரியுமா...?
Train passenger beware law change from July 1st Do you know how much fine if women enter compartment
ரெயில்வே விதிமீறல்களுக்கு இனி கடும் கட்டுப்பாடு அமலாகிறது. பயணிகள் ஒழுங்கை உறுதிப்படுத்தவும், ரெயில்வே சேவைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும் இந்திய ரெயில்வே சட்டம் 1989-ல் முக்கிய திருத்தங்களை ரெயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, ஜூலை 1 முதல் பல்வேறு விதிமீறல்களுக்கான அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட உள்ளது.

குறிப்பாக, ரெயில்களில் பெண்கள் பெட்டியில் அனுமதியின்றி பயணம் செய்யும் ஆண்களுக்கான அபராதம் ரூ.500-ல் இருந்து நேரடியாக ரூ.2,500 ஆக உயர்த்தப்படுகிறது. இந்த நடவடிக்கை பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவாக பார்க்கப்படுகிறது.
அதேபோல், உரிய பயணச்சீட்டு இன்றி ரெயில்களில் பயணம் செய்பவர்களுக்கும் கடும் அபராதம் விதிக்கப்பட உள்ளது. இதுவரை ரூ.250 ஆக இருந்த அபராதம், ஜூலை 1 முதல் ரூ.500 ஆக உயர்த்தப்பட உள்ளது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில், ரெயில்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் விதிமீறலில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படும் குறைந்தபட்ச அபராதம் ரூ.250-ல் இருந்து ரூ.500 ஆகவும், அதிகபட்ச அபராதம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், ரெயில் நிலையங்களில் அனுமதியின்றி பொருட்கள் விற்பனை செய்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் விதிமீறி பயணம் செய்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டி வரும்.
அதோடு, ஆபத்தான பொருட்களை ரெயில்களில் எடுத்துச் சென்றால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ரெயில்களில் புகைப்பிடிப்பவர்களுக்கும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.பயணிகள் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், விதிமீறல்களுக்கு இனி எந்தவித சலுகையும் வழங்கப்படாது என்றும் ரெயில்வே நிர்வாகம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
Train passenger beware law change from July 1st Do you know how much fine if women enter compartment