சோழர்களுக்கும் சீனர்களுக்கும் வணிக தொடர்பா.? அரியலூரில் கண்டெடுக்கப்பட்ட ஆதாரங்கள்..!! - Seithipunal
Seithipunal


மாமன்னர் ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு தெற்காசியாவை ஆட்சி செய்தார். தன் ஆட்சிக்காலத்தில் வடக்கே கங்கை வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியதோடு, கடல் கடந்து இலங்கை, சுமத்ரா, கடாரம், மலேசியா ஆகிய தேசங்களையும் வென்றவர். 

ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அரண்மனைகளில் கட்டிட சிதலங்கள் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாளிகை மேடு பகுதியில் இருப்பது அகழ்வாய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.


 

இந்த பகுதியில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் 3ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 அகழாய்வு குழிகள் அமைக்கப்பட்டு 21 பணியாளர்களைக் கொண்டு ஆய்வு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது வரை 461 வகையான சோழர் காலத்து பொருட்கள் கிடைத்துள்ளது. 

இதற்கிடையே தெற்காசியாவை ஆண்ட சோழர்கள் 11ம் நூற்றாண்டில் சீனர்களுடன் வணிகத்தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சீனர்களுடன் சோழர்கள் வணிகம் செய்வதற்காக நாணயங்கள் உருவாக்க பயன்படுத்தப்பட்ட பல வகையான அச்சு, அரசு நடைமுறைகளை பின்பற்ற பயன்படுத்தப்பட்ட முத்திரைகள், சீன நாட்டின் பீங்கான் ஓடுகள் கிடைத்துள்ளன.

இதன் மூலம் சோழர்கள் வணிகர் ரீதியில் சீனர்களுடன் நேரடியாக தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாளிகை மேட்டில் நடைபெற்று வரும் அகழ்வாய்வில் மேலும் பல சோழர் காலப் பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட புகைப்படங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trade between Cholas and Chinese evidence found in ariyalur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->