அரியலூர் | ஊர் பெயர் பலகைகள் திருட்டு! அதிர்ச்சியில் நெடுஞ்சாலை துறை!
Town name boards theft Highway department shock
அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருமானூர்-புள்ளம்பாடி, முடி கொண்டான்-கள்ளக்குடி, திருமானூர்-ஏலாக்குறிச்சி போன்ற சாலைகளில் வைக்கப்பட்டிருந்த ஊர் பெயர் பலகைகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் சமீப காலத்தில் திருடு போனது.
இதே போல் கிராமங்களில் வைக்கப்பட்டிருந்த சிறிய எச்சரிக்கை பலகைகளும் காணாமல் போயின. அந்த இடங்களில் பலகை இல்லாமல் சட்டங்களாக காட்சியளிக்கின்றன.
இதனால் வாகனம் ஓட்டிகளுக்கு வெளியூரில் இருந்து வரும்போது வழி தெரியாமல் தடுமாற்றம் ஏற்படுகிறது. இந்த எச்சரிக்கை பலகைகள் மற்றும் பெயர் பலகைகள் அலுமினியத்தால் ஆனதால் மர்ம நபர்கள் இதனை திருடி செய்வது நெடுஞ்சாலை துறை மற்றும் கிராம பஞ்சாயத்திற்கு பெரும் அவதியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் ஈடுபட்ட மர்ம திருடர்கள் கிடைக்கவில்லை.

அந்த பெயர் பலகைகள் தொடக்கத்தில் காணாமல் போன போது, காற்றில் கீழே விழுந்து இருக்கும் என கருதப்பட்டது. ஆனால் பல்வேறு இடங்களில் இதே போன்று திட்டமிட்டு பெயர்பலகைகள் மாயமானதால் அதனை திருட்டு என உறுதி செய்யப்பட்டது.
மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில், சிசிடிவி கேமரா வசதி இல்லாத இடத்தில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடங்களில் இந்த பெயர் பலகைகள் திருடப்பட்டுள்ளது.
இது போன்ற திருட்டுகளில் மது போதை ஆசாமிகள் ஈடுபடலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்த திருட்டு புதுவிதமான திருட்டாக இருக்கிறது என காவல்துறையினரும் நெடுஞ்சாலை துறையினரும் தெரிவிக்கின்றனர்.
வாகன வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டும் வகையில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் மர்ம நபர்களால் திருடி செல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Town name boards theft Highway department shock