குற்றால அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு  சுற்றுலா பயணிகள் குளிக்க தடை .! - Seithipunal
Seithipunal


குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த சாரல் மழையினால் தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

குற்றாலம் பகுதியில் நேற்று முன்தினம் முழுவதும் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இரவிலும் தொடர்ந்து பெய்த சாரல் மழையினால் அருவிகளில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்தது.

இதன் காரணமாக, கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கும், அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வனத்துறையினர் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tourists are prohibited from taking a bath due to sudden flood in Kutralam waterfall.


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->