பொங்கல் பண்டிகை : குமரியில் குவியும் சுற்றுலா பயணிகள் - பாதுகாப்புத் தீவிரம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தலங்களில் ஒன்று கன்னியாகுமரி. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் வழக்கத்தை விட ஏராளமான சுற்றுலா பயணிகள் குமரிக்கு வருவார்கள். 

அவர்கள் கடலில் காலையில் உதயமாகும் சூரியனின் இயற்கை அழகையும், 133 அடி உயரத்தில் உள்ள திருவள்ளுவர் சிலையையும், கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் சிலையையும் படகில் சென்று கண்டு மகிச்சியடைவார்கள்.

இந்நிலையில் கடந்த 14ந் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பொங்கல் விடுமுறை என்பதால் பொங்கல் கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்த பொதுமக்கள் கன்னியாகுமரியில் குவிந்து வருகின்றனர். 

அதன் பின்னர், அவர்கள் முக்கடல் சந்திக்கும் சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். மேலும், தற்போது சபரிமலை சீசன் என்பதால் மகர ஜோதியை தரிசித்த அய்யப்ப பக்தர்களும் குமரியில் குவிந்ததால் கூட்டம் அதிகரித்துள்ளது. 

வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருப்பதால் போலீசார், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

touristers flock in kanniyakumari for holiday


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->