நாளை உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்கள்..மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு!
Tomorrow special camps of Stalins plan with you District Collector announcement
நீலகிரி மாவட்டத்தில்" உங்களுடன் ஸ்டாலின்"திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த ஆண்டு சட்டமன்ற பேரவையில் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவக்கப்படும் என அறிவித்திருந்தார்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில், "உங்களுடன் ஸ்டாலின்" என்ற திட்டம் இத்திட்டத்தின் கீழ் நடத்தப்படவிருக்கிறது. மொத்தம் 10,000 துவக்கப்படுகிறது. சிறப்பு முகாம்கள்
அந்தவகையில், நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் 65 முகாம்களும், ஊரக பகுதிகளில் 81 முகாம்களும் நடைபெறும். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். முதற்கட்டமாக "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமானது எதிர்வரும் 15.07.2025 முதல் 14.08.2025 வரை உதகமண்டலம், கோத்தகிரி, குன்னூர் மற்றும் குந்தா ஆகிய வட்டங்களுக்குட்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள் பகுதிகளிலும், 16.08.2025 முதல் 14.09.2025 வரை உதகமண்டலம், குந்தா, பந்தலூர் ஆகிய வட்டங்களுக்குட்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள் பகுதிகளிலும், 15.09.2025 முதல் 14.10.2025 வரை உதகமண்டலம், பந்தலூர் மற்றும் கூடலூர் வட்டங்களுக்குட்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள் பகுதிகளில் நடைபெறவுள்ளது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, சுமார் 650 தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டு, மேற்படி தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும்சென்று வரவிருக்கும் முகாம்களின் தேதி மற்றும் இடம் குறித்து குடியிருப்பாளர்களுக்குத் தெரிவிப்பார்கள். விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி 07.07.2025 முதல் தொடங்கவுள்ளது. முகாமில் வழங்கப்படும் பல்வேறு அரசுத் திட்டங்கள் மற்றும் சேவைகள். தகுதி அளவுகோல்கள் மற்றும் இந்த சேவைகளைப் பெறுவதற்குத் தேவையான ஆவணங்கள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் விளக்குவார்கள். வழங்கப்படும் சேவைகளின் பட்டியல், இந்த சேவைகளைப் பெறுவதற்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பப் படிவம் அடங்கிய துண்டுப்பிரசுரம் குடிமக்களின் வீடுகளுக்குச் செல்லும் போது தன்னார்வலர்களால் விநியோகிக்கப்படும். கூடுதலாக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் (KMUT) கீழ் தகுதியுள்ள பெண்கள், ஏற்கனவே நடந்த முகாமில் விடுபட்டவர்கள், முகாம்களுக்குச் சென்று முகாம் நடைபெறும் நாளில் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுவார்கள். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பம். உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் நாளில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கவுண்டரில் விநியோகிக்கப்படும்.
இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் தங்களது பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் தெரிவித்துள்ளார்.
English Summary
Tomorrow special camps of Stalins plan with you District Collector announcement