Custodial deaths: மரணமடைந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க திட்டமிடும் தவெக தலைவர் விஜய்...!
Custodial deaths tvk leader Vijay plans to meet families deceased
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் 'விஜய்' அவர்கள், தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் காவல்நிலையங்களில் மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் த.வெ.க. சார்பில், மடப்புரம் அஜித்குமார் கொலையை கண்டித்து வருகிற ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக காவல்நிலையங்களில் மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களை சந்திக்க விஜய் அவர்கள் திட்டமிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி,காவல் நிலையங்களில் மரணமடைந்த 20-க்கும் மேற்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்கும் விஜய், அவர்களுக்கு நிதியுதவி வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், விசாரணையின் போது காவலர்களால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானவர்களையும் விஜய் சந்திப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Custodial deaths tvk leader Vijay plans to meet families deceased