ஓரணியில் தமிழ்நாடு!!! சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலமைச்சர் திடீரென வீடு வீடாகச் சென்று...? - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று மாலை திருவாரூர் மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்தார். அதைத்தொடர்ந்து, திருவாரூர் பவித்திரமாணிக்கம் பகுதியிலிருந்து ரோடு-ஷோவாக சென்று மக்களை சந்தித்து, அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இதையடுத்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரெயில்வே மேம்பாலம் அருகில் நிறுவப்பட்டுள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார்.அதன் பிறகு, இரவு சன்னதி தெருவிலுள்ள வீட்டில் ஓய்வெடுத்தார்.தொடர்ந்து, இன்று காலை அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆயத்தமானார்.

அப்போது திடீரென சன்னதி தெருவில் 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள ஒவ்வொரு வீடுகளுக்கு நடந்தே சென்ற முதலமைச்சர் மக்களிடம் தி.மு.க. அரசின் சாதனை எடுத்துக்கூறி, பரப்புரையில் ஈடுபட்டார். எதிர்பாராத விதமாக திடீரென முதலமைச்சர் தங்களது வீட்டிற்கு வந்ததும் செய்வதறியாத பொதுமக்கள் ஆனந்த பெருக்குடன் உற்சாக வரவேற்பளித்தனர்.

அப்போது மக்களிடம் சகஜமாக பேசிய முதலமைச்சர், வீட்டில் கை குழந்தையுடன் நின்று கொண்டிருந்த பெண்ணிடமிருந்து குழந்தையை வாங்கி கொஞ்சி மகிழ்ந்தார். மேலும், சில வீடுகளில் முதலமைச்சருக்கு தேனீர், இனிப்பு கொடுத்து மக்கள் வரவேற்றனர். சன்னதி தெரு முழுவதும் நடந்தே சென்று பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் அரசு நலத்திட்ட உதவிகள் நடைபெறும் விழா இடத்திற்கு புறப்பட்டார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu row Chief Minister suddenly went door to door while on a tour


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->