மூத்த அதிகாரிகளான 2000 பேரை பணி நீக்கம் செய்யும் நாசா...!- டிரம்ப் எதிரொலி
NASA to lay off 2000 senior officials Trump echoes
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து விண்வெளி துறையிலும்,2026 நிதியாண்டிற்கான பணிநீக்கம், நாசாவின் 18000 பணியாளர்களிடையேயும் திட்டமிடல், மற்றும் முன்மொழியப்பட்ட பட்ஜெட் குறைப்பு காரணமாக குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் டஜன் கணக்கான அறிவியல் திட்டங்கள் ரத்து செய்யப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகத்தில் சுமார் 2,145 மூத்த ஊழியர்கள் மற்றும் பணியாளர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் பணிநீக்கம் செய்யப்படும் பெரும்பாலான ஊழியர்கள் GS-13 முதல் GS-15 வரையிலான பதவிகளில், மூத்த நிலை அரசாங்க பதவிகளில் உள்ளவர்கள் என்றும் ஊழியர்களுக்கு முன்கூட்டியே பணி ஓய்வு வழங்கியும் ஏற்கனவே ராஜினாமா செய்ய முன்வந்தவர்களை பணியிலிருந்த விடு பெற ஒப்புதல் வழங்கப்படுகிறது.
இந்தத் தகவலின் அடிப்படையில், 1,818 ஊழியர்கள் தற்போது அறிவியல் அல்லது மனித விண்வெளிப் பயணம் போன்ற முக்கிய பணிப் பகுதிகளில் பணியாற்றுகிறார்கள். மேலும், மற்றவர்கள் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் பணிபுரிகிறார்கள்.
இதுதொடர்பாக செய்தி தொடர்பாளர் பெத்தானி ஸ்டீவன்ஸ் தெரிவிக்கையில்," நாங்கள் அதிக முன்னுரிமை பெற்ற பட்ஜெட்டுக்குள் செயல்படுவதால், எங்கள் பணிக்கு நாசா உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
English Summary
NASA to lay off 2000 senior officials Trump echoes