கலை, அறிவியல் படிப்புகள்.! விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாகும்.

தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இதில் இளநிலை படிப்புக்களில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன. இந்நிலையில், நடப்பாண்டு மாணவர் சோ்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 8ஆம் தேதி தொடங்கியது.

விருப்பமுள்ள மாணவர்கள் http://www.tngasa.in/ என்ற இணையதளம் வாயிலாக, நாளை (19-ம் தேதி) வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வரும் 23-ம் தேதிக்குள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு மே 25 முதல் 29-ம் தேதி வரை நடத்தப்படும் என்றும், முதற்கட்ட பொது கலந்தாய்வு மே 30 முதல் ஜூன் 9ஆம் தேதிவரையும், 2-ஆம்கட்ட பொது கலந்தாய்வு ஜூன் 12 முதல் 20-ஆம் தேதி வரையும் நடைபெறும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tomorrow is the last day to apply for admission in government arts and science colleges of tamilnadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->