எடப்பாடி – தனியரசு ரகசிய சந்திப்பு: கூட்டணி கணக்கில் புதிய திருப்பம்...! - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு நேரில் சந்தித்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு, எதிர்வரும் தேர்தல் கூட்டணி கணக்குகளுடன் தொடர்புடையதாக பேசப்படுகிறது.

அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் கொங்கு இளைஞர் பேரவையை இணைப்பது குறித்த ஆலோசனையே இந்த சந்திப்பின் மையக் கருத்தாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக வரும் 23ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், இந்த சந்திப்பு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.அன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்க உள்ளார். இந்த மேடையில் என்.டி.ஏ. கூட்டணி கட்சித் தலைவர்களை மேடையேற்ற பா.ஜ.க. தீவிரமாக திட்டமிட்டு வருகிறது.

அதற்குள் கூட்டணி அமைப்பை இறுதி செய்யும் பணிகள் பின்னணியில் வேகமெடுத்து வருகின்றன.இந்த சூழ்நிலையில் தனியரசு – எடப்பாடி சந்திப்பு நடைபெற்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு ஊகங்களுக்கு தீனி போட்டுள்ளது.

மேலும், கடந்த நவம்பர் மாதம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சட்டசபைத் தேர்தல் கூட்டணி குறித்து தனியரசு பேசியிருந்த நிலையில், தற்போது அ.தி.மு.க. தலைமையுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது அரசியல் களத்தை இன்னும் சூடாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Edappadi Thaniarasu secret meeting new twist alliance calculations


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->