சென்னை நகரை ஒரு நாளில் சுற்றிப் பாருங்கள்! - ‘சென்னை உலா’ பஸ் சேவை தொடக்கம்...! - Seithipunal
Seithipunal


சென்னை நகரின் சுற்றுலா முகத்தை புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்லும் வகையில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் ‘சென்னை உலா’ என்ற சிறப்பு சுற்றுலா பேருந்து சேவையை கடந்த 14-ம் தேதி அறிமுகம் செய்துள்ளது.
நகரின் முக்கிய வரலாற்றுச் சின்னங்கள், ஆன்மிகத் தலங்கள் மற்றும் பாரம்பரிய இடங்களை ஒரே நாளில் சுலபமாகக் காணும் வசதியை இந்த சேவை வழங்குகிறது.

இந்த திட்டத்தின் சிறப்பாக, 1980-களில் ஓடிய பழைய பேருந்துகளை நினைவூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட 5 தனிப்பட்ட பேருந்துகள் புதுப்பித்து இயக்கப்படுகின்றன. பாரம்பரிய தோற்றமும் நவீன வசதிகளும் இணைந்த இந்த பேருந்துகள் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இந்த பேருந்துகள்,பூங்கா ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், எழும்பூர் அருங்காட்சியகம், வள்ளுவர் கோட்டம் – செம்மொழிப் பூங்கா, லஸ் கார்னர், சாந்தோம், கலங்கரை விளக்கம், விவேகானந்தர் இல்லம், கண்ணகி சிலை, மெரினா கடற்கரை, போர் நினைவுச் சின்னம், தலைமைச் செயலகம், சென்னை உயர்நீதிமன்றம், பல்லவன் இல்லம் ஆகிய முக்கிய இடங்களை சுற்றி மீண்டும் சென்ட்ரல் ரயில் நிலையத்தையே அடையும் வகையில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்து சேவை காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 8.30 மணி வரை பல கட்ட நேரங்களில் இயக்கப்படும்.வெறும் ரூ.50 கட்டணத்தில் ஒரே நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் ஏறி இறங்கும் வசதியுடன் சுற்றுலா அனுபவத்தை பெறலாம் என்பது இதன் முக்கிய அம்சமாகும்.

வார நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த சேவை வழங்கப்படும்.வார இறுதி நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும்.இந்த வழித்தடத்தில் உள்ள எந்த பேருந்து நிறுத்தத்திலும் பயணிகள் ஏறிக்கொள்ளலாம்.

ஒரு பயணச்சீட்டை பயன்படுத்தி 5 பேருந்துகளிலும் பலமுறை பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை நகரத்தை சுற்றிப் பார்க்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த சேவையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Explore Chennai city single day Chennai Tour bus service launched


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->