இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை; முக்கிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி!
Today the Tamil Nadu cabinet is meeting approval for major industrial projects
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூடுகிறது.அப்போது முக்கிய தொழில் சார்ந்த திட்டங்களுக்கு அனுமதி வழங்க ஆலோசனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்திற்கு, பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று வந்தார். அதன் ஒரு பகுதியாக பல்வேறு தொழிற்சாலைகள், தமிழகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்தன.
அந்தவகையில் சமீபத்தில் வின்பாஸ்ட் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்களின் தொழிற்சாலை திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். மேலும் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மீண்டும் வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டுஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு வரும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் சுற்றுப்பயணம் செல்கிறார்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.
இந்த அமைச்சரவை கூட்டத்தில், ஆணவ படுகொலை தடுப்பதற்கான புதிய சட்டங்கள் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணம், தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி, புதிய தொழில் திட்டங்களுக்கு, அனுமதி, உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Today the Tamil Nadu cabinet is meeting approval for major industrial projects