திருச்செந்தூர் கோவிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
The document festival at the Tiruchendur temple begins with the hoisting of the flag
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் ஆவணி திருவிழா இன்று (13.08.2025) அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா வரும் 25ஆம் தேதி வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது.
முதல் நாளில் அதிகாலை 1 மணிக்கு நடை திறப்பு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலை 5 மணிக்கு திருவிழா கொடியேற்றம் நடந்தது. மாலை தங்க சப்பரத்தில் வீதி உலா மற்றும் இரவில் ஸ்ரீபெலி நாயகர் பல்லக்கு உலா நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
முக்கிய நிகழ்வுகள்:
18ஆம் தேதி (5ஆம் திருநாள்): இரவு 7.30 மணிக்கு குடைவரைவாயில் தீபாராதனை, பின்னர் தங்க மயில் வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா.
7ஆம் திருநாள்: சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் பிள்ளையன்கட்டளை மண்டபம் எழுந்தருளல், மாலை தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலம்.
8ஆம் திருநாள்: அதிகாலை பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலம், பகலில் பச்சை சப்பரத்தில் பச்சை சாத்தி கோலம்.
10ஆம் திருநாள் (23ஆம் தேதி): தேரோட்டம் காலை 7 மணிக்கு.

பக்தர்கள் வசதிக்காக 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கம், குடிநீர் மற்றும் மின்சாரம் தடையின்றி வழங்கப்படும். விழா நாட்களில் 500-க்கும் மேற்பட்ட போலீசார், முக்கிய நாட்களில் 750-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
English Summary
The document festival at the Tiruchendur temple begins with the hoisting of the flag