ஓணம் பண்டிகை..கேரள மக்களுக்கு இனிப்பான செய்தி!
Onam festival a sweet message for the people of Kerala
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் 14 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக கேரளா மந்திரி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் பொது மக்களுக்கு இலவசமாக கரும்பு சர்க்கரை போன்ற பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை தற்போது கேரளா அரசும் கையில் எடுத்துள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மக்களுக்கு 14 வகையான பொருட்கள் அடங்கி பரிசு தொகை வழங்க முடிவு செய்துள்ளனர். இந்த இந்த தொகுப்பில் உப்பு,சக்கரை , மஞ்சள் பொடி ,நெய் சிறு பயறு உள்பட 14 வகையான மளிகை பொருட்கள் இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கேரள உணவு வழங்கல் துறை மந்திரி அணில் செய்தியாளருக்கு பேட்டி அளிக்கும் போது தெரிவிக்கையில் இதனை கூறியுள்ளார். கேரளாவில் செப்டம்பர் 5ஆம் தேதி திருவோணம் கொண்டாடப்படுகிறது, இதை ஒட்டி 5 லட்சத்து 92 ஆயிரத்து 1687 மஞ்சள் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும், ஆதரவு இல்லங்களில் வசிக்கும் முதியவர்கள் 10,634 பேருக்கும் பரிசுத்தொகுப்பாக மொத்தம் 6 லட்சத்து 321 பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக மந்திரி அணில் ஆலப்புழாய்யில் தெரிவித்தார்,
இந்த தொகுப்பு 18ஆம் தேதி முதல் ரேஷன் கடை மூலம் இந்த உணவு பொருட்கள் வழங்கப்படும் என்றும் கூறிய மந்திரி ஒரு பரிசு தொகுப்பின் விலை 710 ரூபாயாக இருக்கும் அவர் கூறியுள்ளார். இவை இலவசமாக தனித்தனியாக துணிப்பைகளில் வழங்கப்படும் என்றும் செப்டம்பர் 4ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் இருந்து பரிசு தொகை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ள மந்திரி அணில் இந்த பரி தொகுப்பில் உப்பு ,சீனி, மஞ்சள் பொடி, நெய் ,சிறுபயிறு , மளிகை பொருட்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
English Summary
Onam festival a sweet message for the people of Kerala