இன்று இரவு முதல் உயர்நீதிமன்றத்தின் அனைத்து வாசல்களும் மூடல்.! - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்றம், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பாரம்பரிய கட்டிடமாகும். அதனால், இன்று வரை உயர்நீதிமன்றத்தின் பழைமை மாறாமல் பராமரிக்கப்பட்டு வருகிறது. 

இதையடுத்து, உயர்நீதிமன்றத்தை ஆங்கிலேயர்கள் கட்டியதால் அதற்கு மரியாதை செய்யும் வகையிலும், இது பொதுசொத்து அல்ல என்பதை வலியுறுத்தும் வகையிலும் வருடத்திற்கு ஒருமுறை அதன் நுழைவு வாயில்கள் பூட்டப்படுகின்றன. 

இந்த சம்பிரதாயம் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருவதால், சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆறு நுழைவு வாயில்கள் ஒருநாள் முழுவதும் அதாவது இன்று இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிவரை மூடப்படுகின்றன. 

இதற்கான அறிவிப்பை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் பி.ஹரி வெளியிட்டார். அதில், நுழைவு வாசல்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் போது வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட யாரும் நீதிமன்றத்துக்குள் செல்ல அனுமதி இல்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today night chennai high court six gate close


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->