விநாயகர் சதுர்த்தி - இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கம்.!!
today metro trains run in saturday time table
இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறையும் என்பதால் இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் தெரிவித்து இருப்பதாவது:- "விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இன்று சனிக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும். காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை பின்வரும் நேர இடைவெளிகளில் இயக்கப்படும்.
காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிடங்கள் இடைவெளியிலும், காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். மேலும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
today metro trains run in saturday time table