பணிக்கு வர வேண்டாம்.... ஐடி நிறுவனத்தின் அறிவிப்பால் அதிர்ந்து போன ஊழியர்கள் - நடந்தது என்ன?
today leave to it workers for War rehearsal
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய பாகிஸ்தான் நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை வேகப்படுத்தியுள்ளது.
அதாவது, இந்தியா முழுவதும் 259 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெறுகிறது. சில வடமாநிலங்களில் ஏற்கனவே இந்த பயிற்சி தொடங்கிவிட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளிட்ட 2 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு இந்த போர்க்கால ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், போர்க்கால ஒத்திகை குறித்து பொதுமக்கள் அச்சமோ, பதற்றமோ அடைய தேவை இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று மாலை நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகையை முன்னிட்டு ஐ.டி. நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது இன்ஃபோசிஸ் உள்ளிட்ட ஐ.டி. நிறுவனங்கள் ஊழியர்களை பணிக்கு வர வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளது.
English Summary
today leave to it workers for War rehearsal