திருவண்ணாமலை சோகம்: கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை; போலீசார் விசாரணை..!
A young woman hanged herself after writing a letter in Tiruvannamalai
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு நகரில் உள்ள அருந்ததியர் பாளையம் செஞ்சி சாலையில் வசித்து வருபவர் விஜயகுமார். இவர்சென்னையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சவுந்தர்யாவுக்கு 24 வயது. இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி 06 வருடங்கள் ஆகியும் குழந்தைகள் இல்லை.
இந்நிலையில் சம்பவத்தன்று சவுந்தர்யா தனது உறவினர்களுக்கு தற்கொலை செய்யப்போவதாக 'வாட்ஸ்அப்'பில் தகவல் அனுப்பிவிட்டு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வாட்ஸ்அப்பில் இந்த தகவலை பார்த்து வீட்டுக்கு வந்த அவரது அக்கா, சவுந்தர்யா தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசாருக்கு அவர் தகவல் அளித்த நிலையில், உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சவுந்தர்யாவின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன், சௌந்தர்யா எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
அதில் "என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை" என எழுதி வைத்திருந்துள்ளார். இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுந்தர்யாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
A young woman hanged herself after writing a letter in Tiruvannamalai