ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஐ.நா., பாதுகாப்பு சபை உறுப்பு நாடுகளிடம் இந்தியா விளக்கம்..!
India explanation to the UN Security Council member states regarding Operation Sindoor
பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்ட பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை குறிவைத்து தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல் குறித்து ஐ.நா., பாதுகாப்பு சபை உறுப்பினர்களிடம் இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பல நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகரை தொடர்பு கொண்டு விளக்கமளித்துள்ளார். இந்நிலையில், ஐ.நா., பாதுகாப்பு சபையில் இடம்பெற்றுள்ள 13 உறுப்பு நாடுகளின் உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளை மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி சந்தித்தார்.

இந்த சந்திப்பில் அவர் கூறியதாவது: ஏப்.,22-இல் நடந்த பயங்கரவாத தாக்குதல், இந்தியாவை ஆத்திரமூட்டும் செயல் என்றும், பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்புடைய டிஆர்எப் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றது. ஆனால், பிறகு பின்வாங்கியது என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த தாக்குதல் சம்பவத்தில் ஐ.நா., சபையில் தீர்மானத்தை கொண்டு வர பாகிஸ்தான் கடுமையாக முயற்சித்ததாகவும், இதன் பின்னணியில் ஏதோ ஒரு சதி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த தாக்குதல் குறிப்பிட்ட இலக்குகளை குறிவைத்து, கட்டுப்பாட்டுடன் நடத்தப்பட்டது என்றும், மேலும் பயங்கரவாத முகாம்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர் மேலும் கூறுகையில், பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், இந்தியாவும் தாக்குதல் நடத்தும் என்றும், காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறதாகவும், செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், கத்தார், பிரான்ஸ், ஜெர்மனி நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களை இந்திய வெளியுறத்துத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் தொடர்பு கொண்டு ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கமளித்துள்ளார்.
English Summary
India explanation to the UN Security Council member states regarding Operation Sindoor