ஆபரேஷன் சிந்தூர்: பயங்கரவாத உள்கட்டமைப்பை அழித்தது நியாயமானது:ரிஷி சுனக்..!
Destroying terrorist infrastructure was justified Rishi Sunak
கடந்த ஏப்ரல்-22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தக்கதுளில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, இந்திய பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. குறித்த இந்திய நடவடிக்கைக்கு பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:- பயங்கரவாத உள்கட்டமைப்பை அழித்தது நியாயமானது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், வேறொரு நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்திலிருந்து தனக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுவதை எந்த நாடும் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், பயங்கரவாத உள்கட்டமைப்பை இந்தியா தாக்குவதில் நியாயம் உள்ளது என்றும், பயங்கரவாதிகளுக்கு இதை விட எந்தத் தண்டனையும் இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரிட்டன் பாராளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் ஸ்டார்மர், கூறுகையில், நாங்கள் இரு நாடுகளுடனும், மற்ற சர்வதேச கூட்டாளி நாடுகளுடன் பதற்றத்தைக் குறைத்தல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து அவசர ஆலோசனை, பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Destroying terrorist infrastructure was justified Rishi Sunak