"தமிழ்த் தந்தை" திரு.மறைமலை அடிகள் அவர்கள் பிறந்ததினம்!.
Today is the birthday of Tamil Father Mr Maraimalai Adigal
"தமிழ்த் தந்தை" திரு.மறைமலை அடிகள் அவர்கள் பிறந்ததினம்!.
தனித்தமிழ் இயக்கம் ஆரம்பித்து, தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட தமிழ் அறிஞர் மறைமலை அடிகள் 1876ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி நாகப்பட்டினத்தில் பிறந்தார்.
தமிழ் பற்றால், வேதாச்சலம் என்ற தனது பெயரை மறைமலை என்று மாற்றிக்கொண்டார். இவர் சிறுவயதில் இருந்தே இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்தார்.
மேலும் இவர் 1905ஆம் ஆண்டு சைவ சித்தாந்த மகா சமாஜத்தை ஆரம்பித்தார். 1911ஆம் ஆண்டு துறவு மேற்கொண்டார்.
மூடத்தனமான செயல்களை எதிர்த்த தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்பட்ட மறைமலை அடிகள் 1950ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று மறைந்தார்.

பெண்கள் உரிமைகளுக்காக போராடிய திருமதி.துர்காபாய் தேஷ்முக் அவர்கள் பிறந்ததினம்!.
சிறந்த சுதந்திரப் போராட்ட வீராங்கனை, சமூக சேவகி மற்றும் பெண்கள் உரிமைகளுக்காக போராடிய திருமதி.துர்காபாய் தேஷ்முக் அவர்கள் பிறந்ததினம்!.
துர்காபாய் தேஷ்முக் (Durgabai Deshmukh, ஜூலை 15, 1909 – மே 9, 1981) இந்திய சுதந்திரப் போராளியாக இருந்தார், வழக்கறிஞர், சமூக தொழிலாளி மற்றும் அரசியல்வாதி. அவர் இந்திய அரசியலமைப்பு சட்டமன்ற உறுப்பினராகவும் மற்றும் இந்தியாவின் திட்டமிடல் ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.
துர்காபாய் தேஷ்முக் பெண்கள் விடுவிப்புக்கான பொதுநல ஆர்வலராகவும்,1937ல் ஆந்திர மகளிர் சபையை (ஆந்திர மகளிர் மாநாடு) துவங்கிவைத்தார். அவர் மத்திய சமூக நல வாரியத்தின் நிறுவனர் தலைவராகவும் இருந்தார்.1953இ்ல் சி.டி.தேஷ்முக்கை மணந்தார். சி.டி.தேஷ்முக், 1950-1956இல் இந்திய ரிசர்வ் வங்கியில் முதல் இந்திய கவர்னராகவும், மத்திய அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் பணிபுரிந்தவராவார்.
English Summary
Today is the birthday of Tamil Father Mr Maraimalai Adigal