தமிழகம் முழுவதும் இன்று குரூப் 4 தேர்வு.!! 
                                    
                                    
                                   today group 4 exam in tamilnadu
 
                                 
                               
                                
                                      
                                            தமிழகத்தில் அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறது.
இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 பணிகளில் காலியாக உள்ள 3,935 இடங்களை அறிவித்தது. இந்த இடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு சமீபத்தில் ஹால்டிக்கெட்டையும் வெளியிட்டது. அதன் படி, இந்தத் தேர்வை மொத்தம் 13,89,738 பேர் இன்று தமிழகம் முழுவதும் மொத்தம் 314 மையங்களில் எழுத இருக்கிறார்கள். 
இத்தேர்வினை கண்காணிக்கும் பொருட்டு துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கூடத்தினை எளிதில் அடைவதற்கு ஏதுவாக போக்குவரத்து துறையின் மூலம் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு அனைத்து தேர்வுக் கூடத்திற்கும் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விண்ணப்பதாரர்கள் தேர்விற்குரிய தேர்வுக்கூட அனுமதி சீட்டினை கட்டாயம் தேர்வுக்கூடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
மேலும், விண்ணப்பதாரர்கள் அனுமதிச் சீட்டில் உள்ள முக்கிய அறிவுரைகள் மற்றும் தேர்வாணைய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள், வினாத்தாள் மற்றும் விடைத்தாளில் குறிப்பிட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் முறையாக பின்பற்றுமாறும், அதில் குறிப்பிட்டுள்ள தடை செய்யப்பட்ட மின்னணுச் சாதனங்கள் மற்றும் வேறு வகையான எந்த ஒரு சாதனங்களையும் கொண்டு செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .
                                     
                                 
                   
                       English Summary
                       today group 4 exam in tamilnadu