முதலமைச்சர் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து பல முறை அமைச்சரவை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில், இரண்டு அமைச்சர்களுக்கு இலாகா மாற்றம் செய்யப்பட்டது. 

இதையடுத்து, திமுக பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அமைச்சரவையில் புதிய அமைச்சருக்கு இடம் அளிக்கப்பட்டது. அதன் படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் காலை 11 மணிக்கு  கூட்டப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் கலந்துகொள்கின்றனர். 

பொதுவாக ஒவ்வொரு வருடத்தின் தொடக்கத்திலும் ஜனவரியில் கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், இந்த மாதம் சட்டசபை கூட்டத்தொடர் வருகிற ஒன்பதாம் தேதி தொடங்கவுள்ளது. 

அதன் முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார். அதில், இடம் பெறும் கருத்துகள், திட்டங்கள் போன்றவை இந்த அமைச்சரவை கூட்டத்தில் வைக்கப்படவுள்ளது. அந்த திட்டங்கள் குறித்து அமைச்சரவை ஆலோசனை செய்து அதற்கான அங்கீகாரத்தை வழங்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today cabinate meeting in chennai head office


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->