வரலாற்றில் இன்று : அனைவரும் நினைவு கூறத்தக்க ஒரு முக்கிய தலைவரின் பிறந்த தினம்!! - Seithipunal
Seithipunal


முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94 ஆவது பிறந்த தினம் இன்று. இவரை பற்றிய சில குறிப்புகள் !

சுதந்திர இந்தியாவின் 11 ஆவது பிரதம மந்திரி, அடல் பிஹாரி வாஜ்பாய் ஆவார். இவர் கடந்த1924ஆம் ஆண்டு இதே நாளான டிசம்பர் 25ஆம் தேதி, மத்தியப்பிரதேசத்திலுள்ள குவாலியரில் பிறந்தார். 

இவர் சட்டமன்ற உறுப்பினராக 4 முறையும், மக்களவை உறுப்பினராக 9 முறையும், மாநிலங்களவை உறுப்பினராக 2 முறையும் மற்றும் இந்திய பிரதமராக 3 முறையும் பதவி வகித்தார். 

இவர் தான் இன்றைய பாரதிய ஜனதா கட்சி, அதாவது அன்றைய ஜன சங்கம் என்னும் அரசியல் கட்சியை நிறுவியவர்  இவரே. 

இவர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணிபுரிந்துள்ளார். இந்தியாவின் மிக உயரிய விருதான பத்ம விபூஷண் விருது, லோகமான்ய திலகர் விருது, சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருது, பாரத ரத்னா விருது எனப் பல விருதுகளை வென்றுள்ளார்.

வாஜ்பாய்  பதவிகாலத்தில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை மேற்கொண்டார். தேசிய நெடுஞ்சாலைத் திட்டம், வெளியுறவுக்கொள்கை, பொருளாதார சீர்திருத்தங்கள், கார்கில் போர், போக்ரான் அணுகுண்டு சோதனை, இந்தியா-பாகிஸ்தான் பேருந்து சேவை என உலக நாடுகளின் கவனம் இந்தியாவின் பக்கம் திரும்பியது. 

இவர் அரசியல்வாதி மட்டுமின்றி எழுத்தாளர், கவிஞர் என பனமுகத் திறமை கொண்ட அடல் பிகாரி வாஜ்பாய்,  உடல்  நல குறைவால் கடந்த ஆகஸ்டு மாதம் 16 ஆம் தேதி காலமானார். இவரது உடல் ராணுவ மரியாதையுடன் எரியூட்டப்பட்டது. 

இந்த நிலையில், வாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு 100 ரூ நாணயத்தை மத்திய அரசு வெளியிட்டு சிறப்பித்தது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today Adal Bihari Vajpayee Birthday


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->