கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்களில் இன்று பாதுகாப்பு ஒத்திகை!
Today a security drill at the banks of the Kosasthla River
பூண்டி அணையிலிருந்து நீர் வெளியேற்றப்படும் பொழுது கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பது குறித்த ஒத்திகை இன்று நடைபெறவுள்ளது.
பூண்டி அணையிலிருந்து மிக அதிக நீர் வெளியேற்றப்படும் பொழுது மிக அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும். எனவே, கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பது என்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை தொடர்பாக 16.05.2025 வெள்ளிக்கிழமை இன்று மாலை 4 மணிக்கு வெள்ளிவாயல்,இராமதண்டலம்,மோவூர்,குருவாயல், சேத்துப்பாக்கம் ஆகிய இடங்களில் போலி ஒத்திகை நடைபெற உள்ளது.
மேற்படி ஒத்திகையில் வருவாய்த்துறை, நீர்வள ஆதாரத்துறை, மின்சாரத் துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மீன்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் சார்பில், ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், ஒத்திகையானது பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பானது மட்டுமே. இது தொடர்பாக பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். கொசஸ்தலை ஆற்றில் மிக அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பொதுமக்கள், 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 044-27664177 /27666746 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தெரிவித்தார்.
English Summary
Today a security drill at the banks of the Kosasthla River