நான் கூண்டுக்கிளியாக இல்லை... சாமானிய மனிதனாக இருப்பதையே பவராக பார்க்கிறேன்...! - அண்ணாமலை - Seithipunal
Seithipunal


பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் இன்று திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது, தேசிய அளவில் புதிய பொறுப்பு கிடைக்க வாய்ப்புள்ளதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் தெரிவித்த அவர்,"பிரதமர் நரேந்திர மோடியின் இதயத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடம் உள்ளது.ஆடு மாட்டோட இருக்கேன். விவசாயம் பார்க்குறேன். நேரம் கிடைச்சா கோவிலுக்கு போறேன்.

தேவையில்லாத வேறு வேலையை பார்க்காமல் என்னுடைய பணியை சந்தோஷமாக செய்கிறேன்.புத்தகங்கள் படிக்க நிறைய நேரம் கிடைக்கிறது. வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன். இதிலேயே பயணிக்க வேண்டும் என விரும்புகிறேன். சாமானிய மனிதனாக இருப்பதையே பவராக பார்க்கிறேன்.

எதுக்கு என்னை கூண்டுக்கிளியாக நினைக்கிறீர்கள்.மக்கள் பணி இருக்கு. ஒரு தொண்டனாக நரேந்திர மோடிக்கு பணி செய்ய வேண்டும். என்னுடைய ஆசை பெரியது. தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என்று நினைக்கக்கூடியவன். அதற்கான காலம் வரும். அதுவரை தொண்டனாக பணி செய்துக்கொண்டிருப்பேன்" எனத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I am not a caged parrot I see being an ordinary person as power Annamalai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->