OPS, EPS இருவரும் தேசிய ஜனநாயக கூட்டணியில்...! -நயினார் நாகேந்திரன்
OPS and EPS are both National Democratic Alliance Nainar Nagendran
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி.தினகரனை கூட்டணியில் சேர்க்க கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல் வெளியானது.

இதனிடையே, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரனை கூட்டணியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், OPS மற்றும் EPS இருவரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதாக தெரிவித்தார்.
மேலும் அவர் தெறிக்கையில், "காவல்துறையை முதலமைச்சரால் முழுமையாக கையாள முடியவில்லை என்கிற நிலையுள்ளது. தமிழ்நாட்டில் தினசரி கொலை சம்பவங்கள், போதைப்பொருள் சகஜமாக புழக்கத்தில் உள்ளது" என்று குற்றம்சாட்டினார்.
இது தற்போது அரசியல் ஆர்வலர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
English Summary
OPS and EPS are both National Democratic Alliance Nainar Nagendran