வேண்டுகோள்!!! பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்...! - ஜி.கே வாசன்
affected banana farmers should be given Rs 2 lakh compensation each GK Vasan
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தற்போது அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,"கடந்த ஒரு வார காலத்திற்கு முன்பு அதிக வெப்பம் நிலவி, சூறாவளி காற்றும் வீசி சில இடங்களில் வெப்பச்சலனத்தால் மழை பெய்தது. தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்தும் வருகிறது.

இந்த திடீர் சூறாவளி காற்றால் ஈரோடு, கோவை, திருப்பூர், திருச்சி, தென்காசி, தேனி, சேலம், தூத்துக்குடி ஆகிய மாவட்டப் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 2000 ஏக்கருக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து அழிந்தது. ஒரு ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் செலவு செய்து, நடவு செய்து பல்வேறு பணிகளை செய்து வந்த விவசாயிகள் தற்போது கடுமையான நஷ்டத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.
மேலும் பெற்ற பயிர்க்கடனை கட்டுவதற்கு வழி இல்லாமல், கடுமையான சிரமத்தில் உள்ளார்கள். வாழை மரத்திற்கு பயிர் காப்பீடு செய்தாலும் ஒரு வருவாய் கிராமம் முழுக்க சேதமோ, அழிவோ ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு பெற முடியுமே தவிர சூறாவளி காற்று, சூறைக்காற்று ஆகிய இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புக்கு இழப்பீடு பெற முடியாத நிலையுள்ளது.
எனவே தமிழக அரசு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கோரிக்கையை நிறைவேற்றவும், தற்போது பாதிக்கப்பட்டுள்ள வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு தலா ரூ. 2 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இது தற்போது மக்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
affected banana farmers should be given Rs 2 lakh compensation each GK Vasan