தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 04 மாத அகவிலைப்படி..!
04 months dearness allowance for Tamil Nadu government employees and pensioners
கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் எண் 110 இன் கீழ் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 02 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் இது குறித்து தமிழக அரசு தற்போது அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது:- தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு இம்மாத ஊதியத்துடன் 04 மாத (ஜனவரி – ஏப்ரல் 2025) அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை (DA Arrears) கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 08 லட்சம் அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
04 months dearness allowance for Tamil Nadu government employees and pensioners