தூத்துக்குடியில் பதற்றம்: உடன்குடி அனல்மின் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!
Bomb threat to Udangudi Thermal Power Plant in Thoothukudi
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கல்லாமொழியில் உடன்குடி அனல்மின்நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. உடன்குடி அனல்மின்நிலையத்தில் கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. முதல் யூனிட் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, அடுத்தக்கட்ட பணிகள் அடுத்த மாத இறுதியில் தொடங்கப்படவுள்ளது.
இந்த நிலையில் கல்லாமொழியில் உள்ள உடன்குடி அனல்மின் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டில் விடுக்கப்பட்டுள்ளது. அங்கு பணியில் இருந்த உதவி பொறியாளர் ஒருவரின் மெயிலுக்கு மின்னஞ்சல் வந்துள்ளது. அதில், அனல்மின் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்துள்ளது. இதனை பார்த்த உதவி பொறியியலாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். இது தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாயுடன் நீண்ட நேரம் தேடுதல் வேட்டை நடத்தினர். நீண்ட நேர தேடுதலில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரியவந்தது. எனினும், போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்ற நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் நாட்டில் பல இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்கள் வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Bomb threat to Udangudi Thermal Power Plant in Thoothukudi