பயம் கலந்த அரசியல் மோடி அரசின் அடையாளம்: பயத்தை வைத்து நாட்டை இயக்கக்கூடாது; உண்மை அடிப்படையில் இயக்கவேண்டும்: ராகுல் விமர்சனம்..! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக குஜராத்தை சேர்ந்த நாளிதழின் இணை நிறுவனர் பாகுபலி ஷாவை  அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அம்மாநிலத்தில் பா.ஜ, மற்றும் காங்கிரஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகுபலி ஷாவை கைது செய்துள்ளமைக்கு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்  கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ''பயத்தை வைத்து நாட்டை இயக்கக்கூடாது. உண்மை மற்றும் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் இயக்க வேண்டும்,'' என கூறியுள்ளார். 

இது தொடர்ப்பாங்க ராகுல் அறிக்கை வெளியிட்டு கூறியுள்ளதாவது: குஜராத் நாளிதழின் குரலை ஒடுக்குவது என்பது, ஒரு நாளிதழை மட்டும் அல்லாமல், ஒட்டு மொத்த ஜனநாயகத்தையும் ஒடுக்குவதற்கு நடக்கும் சதியாகும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், நாளிதழுக்கு உள்ள உரிமையை முடக்குவது என்பது ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதை காட்டுகிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், பாகுபலி ஷா கைது செய்யப்பட்டுள்ளது, பயம் கலந்த அரசியலின் ஒரு அங்கம் ஆகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இது மோடி அரசின் அடையாளம் என்றும்,  பயத்தை வைத்து நாட்டை இயக்கக்கூடாது எனவும், உண்மை மற்றும் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் நாடு இயக்கப்பட வேண்டும். என்று ராகுல் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The country should not be run based on fear it should be run based on truth Rahul Gandhi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->