தப்பித்து விடலாம் என்று திட்டமிட்ட திமுகவின் முகத்திரை விரைவில் கிழிக்கப்படும் - பாஜக நாராயணன்!
BJP Narayanan Condemn to DMK MK Stalin Govt School Dept
பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கல்வித்துறையில் ஊழல் செய்து விட்டு, அதை மூடி மறைக்க, மத்திய அரசு நிதி அளிக்க மறுக்கிறது என்று திராவிட மாடல் திமுக அரசு கூறுகிறது என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தேன்.
குறிப்பாக அனைவருக்கும் கல்வி (சமக்ர சிக்க்ஷா) திட்டத்தில் கணினி சோதனை கூடங்கள் மற்றும் கணிணி ஆசிரியர் நியமனம் செய்வதற்காக அளிக்கப்பட்ட நிதியை, கேரளாவின் கெல்ட்ரான் நிறுவனத்தின் மூலம் தரவு சேகரிப்பு பணிகளுக்காக பணியாட்களை நியமித்து பெரும் ஊழலை செய்துள்ளது திராவிட மாடல் திமுக அரசு.
இன்று இந்த விவகாரத்தில் தான் K Smart என்ற நிறுவனத்தின் கேசவன் என்பவரிடம் அமலாக்கத்துறையின் விசாரணை மற்றும் சோதனை நடைபெற்று வருகிறது.
கல்வித்துறையில் ஊழல் புரிந்து, மாநில உரிமைகள் என்ற போர்வைக்குள் நுழைந்து தப்பித்து விடலாம் என்று திட்டமிட்ட திமுக வின் முகத்திரை விரைவில் கிழிக்கப்படும். ஏழை எளிய மக்கள் பயிலும் அரசு இடை நிலை பள்ளிகளுக்கு மத்திய பாஜக அரசு வழங்கும் நிதியில் ஊழல் புரிந்துள்ள திமுக வின் மெகா ஊழல் விரைவில் அம்பலமாகி விடும்" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Narayanan Condemn to DMK MK Stalin Govt School Dept