அடிச்ச அடியில் குரூப் 4 தேர்வு முடிவு குறித்து டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட அறிக்கை! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ம் தேதி தமிழக அரசுத் துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 9,870 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு நடைபெற்றது. 

மொத்தம் 18 லட்சத்து 36,535 பேர் தேர்வெழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்த நிலையில் தொடர்ந்து காலதாமதமாகி வருகிறது.

இதற்கிடையே, அரசுப் பணிகளில் மகளிருக்கான இடஒதுக்கீட்டு விதிகளில் உரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதன் காரணமாக குரூப்-4 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்து, பின்னர், அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர கால அட்டவணையில் பிப்ரவரி 2-வது வாரம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்ற தெரிவித்தது.

அப்போதும் தேர்வு முடிவுகள் வெளியாகாததால் பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன. இதனையடுத்து மார்ச் மாதம் முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சமூக வலைத்தளமான ட்விட்டரில் குரூப் 4 தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று,   #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக் மூலம் தேர்வர்கள் ட்ரண்ட் செய்து வருகின்றனர்.

இந்திய அளவில் இந்த ஹேஷ்-டேக் ட்ரண்ட் ஆகவே, டி.என்.பி.எஸ்.சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 5 ஆண்டுகளைக் காட்டிலும் இந்த முறை தேர்வர்களின் எண்ணிக்கை அதிகம். 

ஓஎம்ஆர்(omr) விடைத்தாள்களின் எண்ணிக்கை 36 லட்சத்துக்கும் கூடுதலாக உள்ளது. குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியாக வாய்ப்பு உள்ளது என்று விளக்கமளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNPSC We Want Group 4 Results TamilNadu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->