ஒரே மாதத்தில் இரண்டாவது ஏற்றம்...! வணிக சிலிண்டர் விலை பாய்ச்சல்...!
second price hike single month Commercial cylinder prices surge
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, எல்.பி.ஜி சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்கலாம் என மத்திய அரசு முன்கூட்டியே அறிவித்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக, மாதந்தோறும் விலை மாற்றங்களை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.
அந்த வகையில், பிப்ரவரி மாதத்திற்கான வணிகப் பயன்பாட்டு எல்.பி.ஜி சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு, வியாபாரிகள் மற்றும் ஹோட்டல் துறைக்கு கூடுதல் சுமையாக மாறியுள்ளது.
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.50 அதிகரித்து தற்போது ரூ.1,899 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதமே ரூ.110 உயர்வு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தொடர்ச்சியான இந்த விலை ஏற்றம் சிறு வணிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையில், பொதுமக்களுக்கு ஓரளவு நிம்மதியாக, 14 கிலோ எடை கொண்ட வீட்டு சமையல் சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.868.50-க்கு தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
second price hike single month Commercial cylinder prices surge