வரலாற்றில் முதன்முறை… ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யும் மத்திய அரசு....!
first time history central government present budget Sunday
இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் நாட்டின் முதல் மத்திய பட்ஜெட் 1947ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு பல ஆண்டுகள், ஒவ்வொரு நிதியாண்டிற்குமான பட்ஜெட்டை பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் தாக்கல் செய்வது மரபாக இருந்து வந்தது.

இந்த நடைமுறை 2016ஆம் ஆண்டு வரை தொடர்ந்த நிலையில், 2017ஆம் ஆண்டு முதல் பட்ஜெட் தினம் பிப்ரவரி 1ஆம் தேதியாக மாற்றப்பட்டது.அந்த நடைமுறையைத் தொடர்ந்து, 2026–27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படாதபோதும், இந்த முக்கிய நிகழ்வை முன்னிட்டு பாராளுமன்றம் இன்று சிறப்பு அமர்வாக கூடுகிறது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட், சுதந்திர இந்தியாவின் 88வது பட்ஜெட்டாகும். அதேசமயம், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 9வது பட்ஜெட் என்பதும் இந்த நிகழ்வுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறது.
English Summary
first time history central government present budget Sunday