வங்கத்தில் ஊடுருவல் அரசியல்...? - திரிணாமுல் மீது அமித்ஷா கடும் குற்றச்சாட்டு...!
Infiltration politics Bengal Amit Shah levels serious allegations against Trinamool
மேற்கு வங்க மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பாரக்பூரில் நடைபெற்ற பா.ஜ.க. தொண்டர்கள் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தீவிர அரசியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அவர் பேசுகையில், “மேற்கு வங்கத்தில் ஆட்சி புரியும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு, வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக நுழையும் ஊடுருவல்காரர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது.
இந்த ஊடுருவல் மாநில பிரச்சினையைத் தாண்டி, நாடு முழுவதற்கும் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டபோதும் கூட, எல்லை வேலி அமைக்க பிஎஸ்எப் படைகளுக்கு நிலம் வழங்க மாநில அரசு தயங்குகிறது.
இதற்குக் காரணம், அந்த ஊடுருவல்காரர்களைத் தங்களது வாக்கு வங்கியாகப் பயன்படுத்தும் அரசியல் நோக்கமே. மாநில காவல்துறை கூட சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கத் தவறிவிட்டது.
போலி ஆவணங்கள் மூலம் அவர்கள் நாட்டின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறார்கள்.இந்த நிலைமையை மாற்ற, திரிணாமுல் ஆட்சியை முற்றிலும் அகற்றி, தேசபக்தியும் தேசியவாதமும் கொண்ட புதிய அரசை அமைப்பதே அவசியம்.
மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. அரசு உருவாகுவது மாநில வளர்ச்சிக்கே அல்ல, நாட்டின் பாதுகாப்பிற்கும் மிக முக்கியமானது” என்று அவர் வலியுறுத்தினார்.
English Summary
Infiltration politics Bengal Amit Shah levels serious allegations against Trinamool