மிக கனமழை அலர்ட்.. "3 மாவட்ட ஆட்சியருக்கு" முக்கிய உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. அதேபோன்று காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பதிவாகியுள்ளது.

தென்மேற்கு பங்கர் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. 

அதன்படி இன்று தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதால் தென்காசி விருதுநகர் தேனி மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt sent circular to 3 districts collectors


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?
Seithipunal
--> -->